மார்ச் 12ம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது விழாவில் கலந்துகொள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படக் குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு நேர்காணல் ஒன்றில் நடிகர் ராம் சரண் தனக்குப் பிடித்த திரைப்படங்களைப் பட்டியலிட்டார். அதில் “The Notebook, The Terminator-2, ‘Gladiator’, ‘Inglourious Basterds‘ மற்றும் Quentin Tarantinoவின் படங்கள் அனைத்தும் பிடிக்கும்” என்று கூறியிருந்தார். மேலும் நான்கு இந்தியப் படங்களைச் சுட்டிக்காட்டி இந்த படங்களை அவசியம் பாருங்கள் என, “Danna Veera Soora Karna, Mr India, பாகுபலி, Rangasthalam “என்று பட்டியலிட்டார்.
இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பாலிவுட் பிரபலங்கள் பலர் தங்களுக்குப் பிடித்தமான திரைப்படங்களை பட்டியலிட்டு வருகின்றனர். அந்த வகையில் ‘எமர்ஜென்சி’, ‘சந்திரமுகி-2’ திரைப்படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகையான கங்கனா, “1. Amadeus, 2. The Shawshank Redemption, 3. American Beauty, 4. Pyaasa 5. Amour 6. Seven Year Itch 7. Interstellar 8. The Notebook” என தனக்குப் பிடித்த படங்களை பட்டியலிட்டு அவசியம் பார்க்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். மேலும் பாலிவுட்டில் தனக்குப் பிடித்த திரைப்படங்கள் என “1.Hum aapke hain kaun 2. Hum dil de chuke sanam 3. Tanu Weds Manu 2 4. Kagaz ke phool 5. Guide 6. Golmaal (Amol Palekar) 7. Jaane bhi do Yaaro 8. Chashme Budoor (1981)” படங்களை பட்டியலிட்டுள்ளார். இதுபோன்று பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் தங்களுக்குப் பிடித்தமான திரைப்படங்களை பட்டியலிட்டு வருகின்றனர்.
+ There are no comments
Add yours