இது 2019-ம் ஆண்டு வெளிவந்த ‘ஜான் விக்: சேப்டர் 3 – பேராபெல்லம்’ திரைப்படத்தின் நேரடி தொடர்ச்சியாகும். ஜான் விக்கின் முதல் மூன்று திரைப்படங்கள் பிரமாண்ட வெற்றி பெற்றதையடுத்து இந்தப் படம் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகக் காத்திருக்கிறது. கீயானு ரீவ்ஸ் நடிப்பில் வெளிவரும் இந்தப் படத்தொடரின் மிக நீளமான திரைப்படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் புதிய படம் குறித்துப் பேசிய நடிகர் கீயானு ரீவ்ஸ், “முந்தைய ‘ஜான் விக்’ படங்களில், நிறைய வேடிக்கையான, எதிர்பாராத திருப்பங்களுடனும், கதாபாத்திரங்களுடனும் கதைக்களம் நிகழும் உலகை நாங்கள் விரிவாகக் காட்டினோம். சேப்டர் 4-இல், ஜான் விக்கின் புதிய மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் புதிய ஆயுதங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி சொகுசான மஸில் கார்களை நாங்கள் மீண்டும் கொண்டுவந்துள்ளோம்! பழிவாங்குவதில் வல்லவரான வின்ஸ்டன், இந்தக் கதையில், சாத்தியமேயில்லை என்று நினைக்கக்கூடிய சூழ்நிலையிலிருந்து ஜான் விக்கை விடுவிக்கும் ஒரே வழியை வடிவமைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறார்” என்று கூறினார்.
மேலும், “ஜானுக்கு நிறைய நண்பர்கள் இல்லை, ஆனால் நட்பு மற்றும் தியாகத்தில் ஊறிய ஒரு பிரதர்ஹுட் அவனுக்காக உள்ளது. ஜான், கெய்ன், மற்றும் ஷிமாஸு ஆகியோர் ‘தி அஸாசின்’ என்கிற ஒரு முக்கோணக் கூட்டணியை ஆரம்பிக்கிறார்கள்; எல்லாவற்றிலும் இருந்து விலகியிருந்த கெய்ன், தனது மகளைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் களத்தில் இறங்குகிறார். இப்படிப் பல திருப்பங்கள் படத்தில் உள்ளன!” என்று பேசியுள்ளார்.
+ There are no comments
Add yours