பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்குக்கும் அவருடைய மனைவி ஆலியா சித்திக்குக்கும் இடையே நீண்ட காலமாக விவாகரத்து பிரச்னை இருந்துவருகிறது.
“வீட்டில் எனக்குச் சாப்பாடு கொடுப்பதில்லை, பாத்ரூம் பயன்படுத்த அனுமதிக்கவில்லை, குழந்தைகளுடன் வீட்டின் முன் அறையில்தான் படுத்து உறங்குகிறேன்” என்று ஆலியா சித்திக்கி தொடர்ந்து நவாசுதீன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். ஆலியா சித்திக்கி முன் வைத்த எந்த ஒரு குற்றச்சாட்டிற்கும் இதுவரைக்கும் பதிலளிக்காமல் மௌனம் காத்து வந்த நவாசுதீன் தற்போது அறிக்கை ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “நான் அமைதியாக இருப்பதால் எல்லா இடங்களிலும் கெட்டவன் என்று அழைக்கப்படுகிறேன். நான் அமைதி காத்ததற்குக் காரணம் என் குழந்தைகள் இதை எங்கேயாவது படித்துவிடுவார்கள் என்றுதான். சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், ஒரு சில மனிதர்கள் எனச் சிலர் வீடியோவைப் பார்த்து எனது நடத்தையை அவதூறாகப் பேசுவதை ரசிக்கிறார்கள். எனவே நான் சிலவற்றை எடுத்துரைத்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலில் நானும் ஆலியாவும் பல வருடங்கள் ஒன்றாக இருக்கவில்லை.
நாங்கள் ஏற்கெனவே விவாகரத்து பெற்றுவிட்டோம். எங்கள் குழந்தைகளுக்காக மட்டுமே எங்களுக்குள் புரிதல் இருந்தது. யாருக்காவது தெரியுமா ஏன் என் குழந்தைகள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று? 45 நாள்களாக அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. பள்ளியிலிருந்து எனக்குக் கடிதம் வருகிறது. 45 நாள்களாக என் குழந்தைகள் பணையக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதால் துபாயில் அவர்களின் பள்ளிப்படிப்பை இழக்கிறார்கள்.
+ There are no comments
Add yours