3/6/2023 4:48:04 PM
சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி இடையே மலர்ந்த நெருங்கிய நட்பு, தற்போது அசைக்க முடியாத காதலாக நிலைகொண்டுள்ளது. இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கின்றனர். விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஜோடி சேர்ந்து வருகின்றனர். விஷாலின் ‘எனிமி’ படத்தில் இடம்பெற்ற ‘டம் டம்’ என்ற பாடலுக்கு சித்தார்த்துடன் இணைந்து அதிதி ராவ் ஹைதரி நடனமாடிய வீடியோ வைரலானது. இந்நிலையில், சித்தார்த்துடனான காதல் செய்திக்கு அதிதி ராவ் ஹைதரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மக்கள் அப்படித்தான் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. எதையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது தேவையற்றது. தற்போது எனது வேலையில் அதிக கவனம் செலுத்துகிறேன். நான் விரும்பும் இயக்குனர்களுடன் பணிபுரியும் வரை, ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்ளும் வரை’ என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours