நேற்று படப்பிடிப்பு நடந்தபோது அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. அவரது விலா எலும்பு உடைந்துவிட்டது. இதனால் தற்போது படப்பிடிப்பில் பங்கேற்காமல் ஓய்வு எடுத்து வருவதாக அமிதாப் பச்சன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“வலது பக்க விலா எலும்பு முறிவு ஏற்பட்டதோடு தசை கிழிந்துவிட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். காயம் ஏற்பட்டவுடன் உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஐதராபாத் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அமிதாப்பச்சனுக்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்துப்பார்த்தனர். இதில் எலும்பு முறிவு இருந்தது தெரிய வந்தது. அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு அமிதாப் பச்சன் நேராக மும்பை வந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதி கட்டப்பட்டுள்ளது.
தற்போது வலி இருப்பதாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். சகஜ நிலைக்குத் திரும்ப இன்னும் சில வாரங்கள் பிடிக்கும். எனவே அனைத்துப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மருந்து எடுத்துக்கொண்டிருக்கிறேன். அத்தியாவசிய பணிகளை மொபைல் மூலம் மேற்கொண்டு வருவதாகவும், மூச்சுவிடவும், நடமாடவும் கஷ்டமாக இருக்கிறது” என்று தனது சோசியல் மீடியா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours