இந்த சீரிஸ்ல என்னுடைய கேரக்டர் முக்கிய அரசியல் தலைவர்களுக்குப் பாதுகாப்பு தருகிற `இசட்’ பிரிவில் சீஃப் செக்யூரிட்டி ஆபீசர்.
அதனால ஆர்மி கட் உள்ளிட்ட கெட்-அப் வேணும்னு சொன்னாங்க. ஒருபக்கம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ல கைலி பணியனுடன் வந்து போயிட்டே இன்னொரு பக்கம் இந்த கெட்-அப்புக்கு மாற வேண்டி இருந்தது.
இந்த சீரிஸ்ல நடிக்க ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் யூனிட்டுமே எனக்கு ரொம்பவே உதவியா இருந்தாங்க.
இந்த ஆக்ஷன் த்ரில்லர் சப்ஜெக்ட்ல லீட் ரோல்ங்கிறதால நிறைய ஹோம் ஒர்க் பண்ணினேன். இசட் பிரிவுன்னா என்ன, எதுக்குக் கொண்டு வந்தாங்க, அவங்களுடைய வேலையின் தன்மை, இவங்க ஆயுதங்களைக் கையாள்கிற விதம்னு ஒவ்வொரு விஷயமாத் தேடித் தேடித் தெரிஞ்சுகிட்டேன். ‘வதந்தி’ பண்ணினப்ப உடல் எடையை கூட்ட வேண்டியிருந்தது. இதுக்காக மறுபடி எடையைக் குறைச்சிருக்கேன். மொத்தம் ஆறு எபிசோடுகள் வெளியாக இருக்கிற ‘மாய தோட்டா’வும் நிச்சயம் நல்ல ஒரு வரவேற்பைத் தரும்னு நம்பறேன்’ என்கிறார் குமரன். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடருக்குப் பிறகு முழுக்க முழுக்க வெப்சீரிஸ், சினிமா எனக் கிளம்பி விடுவார் என்கின்றனர்.
+ There are no comments
Add yours