நடிகை கங்கனா ரணாவத் தன் தாயார் குறித்து, பாலிவுட் திரையுலகம் குறித்தும் ரசிகர் கேட்ட கேள்விக்கு சோஷியல் மீடியாவில் பதிலளித்திருக்கிறார். அதில் என் தாயார் 25 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றியவர். நான் படத்தில் நடித்து வருவதால் எனது தாயார் பெரிய பணக்காரராக மாறிவிடவில்லை.
நான் அரசியல்வாதி, அதிகாரி மற்றும் தொழிலதிபர் குடும்பத்தில் இருந்து வந்தவள். எனது இந்த மனப்பான்மை எங்கிருந்து வந்தது என்பதையும், நான் ஏன் திருமண நிகழ்ச்சிகளில் நடனமாடுவதில்லை என்பதையும் சினிமா மாஃபியாக்கள் புரிந்து கொள்ளவேண்டும். என் அம்மா இன்றும் விவசாயம் செய்துகொண்டுதான் இருக்கிறார். தினமும் 7-8 மணி நேரம் விவசாயத் தோட்டத்தில் வேலை செய்கிறார். வெளியில் சென்று சாப்பிடுவது, வெளிநாடு செல்வது, படப்பிடிப்பை வந்து பார்ப்பது, மும்பையில் வந்து ஆடம்பரமாக வாழ்வது போன்ற எதுவும் என் தாயாருக்குப் பிடிக்காது. இதற்காக நாங்கள் அவரிடம் கட்டாயப்படுத்தினால் எங்களுடன் சண்டையிடுவார்.

பணத்திற்காக திருமணங்களில் நடனமாடும் மாஃபியாக்களின் உண்மையான குணநலம் பற்றியெல்லாம் தெரியாது. அதனால்தான் நான் அவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. அவர்களுக்கு மரியாதை கொடுக்கவும் மாட்டேன். திரைப்பட மாஃபியாக்கள் எனது நடவடிக்கையால், `என்னை ஆணவம் பிடித்தவள்!’ என்று சொல்கிறார்கள். ஆனால் என் தாயார் கஷ்டமான நேரத்திலும் எப்படி வாழவேண்டும் என எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.
யாரிடமும் பிச்சை எடுக்கமாட்டேன். எனது மதிப்பு மற்றும் தர்மத்திற்கு எதிராக எதையும் செய்யவேண்டாம் என்று அம்மா எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். இது ஆவணமா அல்லது நேர்மையா? என்று சொல்லுங்கள். நான் மற்ற பெண்களைப்போல் கிசுகிசுக்களில் சிக்குவதில்லை. திருமணங்களில் நடனமாடுவதில்லை. சிலர் செல்லும் அறைகளுக்கு நான் செல்வதில்லை. எனவே எனது பெயரைச் சொல்லி பைத்தியக்காரி என்று சொல்கிறார்கள்.
நான் சம்பாதிப்பதைப் படம் தயாரிக்கவே பயன்படுத்துகிறேன். இப்போது என்னிடம் எதுவும் இல்லை. என் அம்மா வயல்களில் வேலை செய்வதை பார்க்கும் போது என்னிடம் எல்லாமே இருப்பதாக உணர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours