2/22/2023 10:56:16 AM
சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார். பொன்னியின் செல்வன், சர்தார் படங்களுக்கு பிறகு ராஜு முருகன் இயக்கும் ஜப்பான் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இதையடுத்து புதிய படத்தில் நடிக்க கார்த்தி கதைகள் கேட்டு வந்தார். இந்நிலையில் நலன் குமாரசாமி சொன்ன கதை பிடித்ததால் அதில் நடிக்கிறார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும், குட்டி ஸ்டோரி படங்களை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார்.
அவரது இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. மார்ச் மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஜப்பான் படத்தில் நடித்தபடியே இந்த படத்திலும் கார்த்தி நடிக்க உள்ளார். டெக்னீஷியன்கள் மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours