எட்டு டிகிரி குளிரில் சண்டை காட்சிக்கான பயிற்சியில் சமந்தா
21 பிப், 2023 – 13:57 IST

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஏப்ரலில் அவரது சாகுந்தலம் படம் வெளியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் பேமிலிமேன் 2 வெப் சீரிஸில் அவர் நடித்ததை தொடர்ந்து பாலிவுட் வாய்ப்புகளும் அவரைத்தேடி வருகின்றன. அந்த வகையில் பேமிலிமேன்-2 வெப்சீரிஸில் நடித்த சமந்தா அந்த வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாக உள்ள சிட்டாடல் வெப் சீரிஸில் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார்.
சமீபகாலமாக சமந்தாவின் உடல்நிலை சரியில்லாததால் படப்பிடிப்பில் நடிப்பதை சில மாதங்களுக்கு தள்ளி வைக்கலாம் என்கிற முடிவில் இருந்தனர். பின்னர் இந்த வெப் சீரிஸில் இருந்து அவர் விலகி விட்டார் என்றும் ஒரு தகவல் வந்தது. ஆனால் சிட்டாடல் வெப் சீரிஸில் இருந்து சமந்தா விலகவில்லை என்றும் அவர்தான் முக்கிய தூண் என்றும் படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து உறுதியாக கூறி இருந்தார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து வரும் குஷி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்த சமந்தா, தற்போது சிட்டாடல் வெப் சீரிஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். நைனிடாலில் எட்டு டிகிரி செல்சியஸ் குளிரில் நடைபெற்று வரும் இந்த வெப் சீரிஸில் சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவான் இருவரும் கலந்து கொள்ளும் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இதற்காக படப்பிடிப்பு தளத்தில் ஹாலிவுட் சண்டை பயிற்சி நிபுணர் யானிக் பென், சமந்தாவிற்கு ஆக்சன் காட்சிகளை விளக்கும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
+ There are no comments
Add yours