Cooku with Comali Season 4: சமூக வலைதளப் பக்கங்களில் சர்ச்சைக்குள்ளாகும் முடிவுகள்; என்ன பிரச்னை? | Cooku with Comali season 4 faces criticism in Social Media

Estimated read time 1 min read

அடுத்ததாக, கோமாளியாக என்ட்ரியான ஓட்டேரி சிவா திடீரென வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் குடித்துவிட்டு செட்டிற்குள் வந்ததாகவும், பெண் போட்டியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அதன் காரணமாகவே ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து அவரை வெளியேற்றியதாகவும் தகவல்கள் பரவிவந்தன. ஆனால், அது உண்மையில்லை என்றும், அவரைப் போட்டியாக நினைக்கின்ற சில யூடியூபர்களே இந்த மாதிரியான தவறானத் தகவல்களைப் பரப்புவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், எது எப்படிடோ, அந்தச் சர்ச்சைக்குப் பிறகு ஓட்டேரி சிவா நிகழ்ச்சியில் பங்கேற்கவே இல்லை.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்ட இயக்குநரும் நடிகருமான கிஷோர் ராஜ்குமார் போட்டியிலிருந்து கடந்த வாரம் எவிக்ட் ஆனார். இந்த சீசனின் முதல் எவிக்‌ஷன் இவர்தான்! ஷிவாங்கிக்குப் பதிலாக இவரை வெளியேற்றியதாக அவரே கூறியது போல சில வீடியோக்கள் யூடியூபில் வெளியாகின. ஆனால், அதுவும் உண்மையில்லை. இந்த சீசன் முடியும் வரையில் சேனல் தரப்பிலிருந்து யாருக்கும் பேட்டி கொடுக்கக் கூடாது என்கிற ஒப்பந்தம் போட்டிருப்பதால், நிகழ்ச்சி முடிந்தே பேட்டி கொடுக்க முடியும் என அவர் தெரிவித்திருக்கிறார். 

குக்கு வித் கோமாளி கிஷோர்

குக்கு வித் கோமாளி கிஷோர்

‘மற்றவர்கள் சமைத்ததை ஒப்பிடும்போது இவர் நல்லாத்தான் சமைச்சிருப்பார்’ என அவருடைய ஃபைனல் டிஷ்ஷை வைத்தே அவருடைய ரசிகர்கள் பலரும் கமென்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

உண்மை என்ன என்பது ‘குக்கு வித் கோமாளி’ குழுவினருக்கு மட்டுமே தெரியும்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours