அந்தவகையில் தற்போது மறைந்த நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ மயில்சாமி அவர்கள் என் நெருங்கிய நண்பர். அவரை 23, 24 வயசுல மிமிக்கிரி ஆர்டிஸ்டா இருக்கும்போதே எனக்கு தெரியும். மிமிக்கிரி ஆர்டிஸ்டா இருந்து நகைச்சுவை நடிகரா சினிமாத் துறைக்கு வந்தார். அவர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர், அதைவிட மிகத்தீவிர சிவன் பக்தர். அடிக்கடி நாங்கள் சந்திப்போம்.

அப்போது நான் சினிமாத் துறையை பற்றி அவரிடம் கேட்பேன், அவர் சினிமாவைப் பற்றி பேசவே மாட்டார். இரண்டு விஷயங்களை பற்றிதான் அவர் அடிக்கடி பேசுவார். ஒன்று எம்.ஜி.ஆர். மற்றொன்று சிவன். நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தும் கூட நிறைய படங்கள் நடிக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் திருவண்ணாமலையில் நடக்கக்கூடிய கார்த்திகை தீபத்திற்கு சென்றுவிடுவார். அங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்துவிட்டு அவர் ஹீரோவாக நடித்து விட்டு வெற்றிகரமாக படம் ஓடுவது போன்று அவர் சந்தோஷப்படுவார். கடைசி முறை கார்த்திகை தீபத்திற்கு என்னைத் தொடர்பு கொண்டார். நான் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் எடுக்க முடியவில்லை. மூன்று முறை தொடர்பு கொண்டிருக்கிறார் என்னால் எடுக்கவே முடியவில்லை.
+ There are no comments
Add yours