Ram Charan’s crew showered flowers on Kiara’s wedding

Estimated read time 1 min read

திருமணமான கியராவுக்கு மலர்தூவி வாழ்த்திய ராம்சரண் படக்குழு

2/15/2023 12:47:55 PM

ஐதராபாத்: காதலரை மணந்துகொண்ட கியரா அத்வானிக்கு மலர் தூவி, ராம்சரண் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர். பாலிவுட் நடிகை கியரா அத்வானி, தெலுங்கில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ராம்சரண் நடிக்கும் இந்த படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் நடித்து வந்த கியரா, திடீரென தனது காதலரும் பாலிவுட் நடிகருமான சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்துகொண்டார்.

படப்பிடிப்பு இருந்ததால் படக்குழுவினர், கியரா திருமணத்துக்கு செல்ல முடியவில்லை. இதனால், ராம் சரண், ஷங்கர், தில் ராஜு மற்றும் படக்குழுவினர் ஒன்றாக கூடி மலர்களை தூவி கியராவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பும் வீடியோவை படமாக்கினர். இதையடுத்து கியராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பரிசாக இந்த வீடியோவை அனுப்பி வைத்தனர். இதற்கு கியராவும் சித்தார்த் மல்ஹோத்ராவும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours