இதுதவிர, 5.8 கோடி எண்ணிக்கை பேர் இந்தி மொழிப் படங்களை விரும்பிப் பார்த்திருக்கின்றனர். இது முந்தைய நிலவரத்தைவிடச் சற்றே குறைவான எண்ணிக்கை என்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம், பாலிவுட் அடுத்தடுத்த சந்தித்த பெரிய தோல்விகள்தான் என்கின்றனர்.
ஆனால், தமிழ், தெலுங்கைப் பொறுத்தவரை எந்தவொரு பெரும் சரிவும் இல்லாமல் 2.8 கோடி பேர் என்ற எண்ணிக்கையை அவை தொட்டுள்ளன. அதே சமயம், தென்னிந்தியப் படங்கள் இந்திய அளவில் வரவேற்பைப் பெற்றதால், அந்த எண்ணிக்கையில் எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை. அதிலும் குறிப்பாக, கன்னட மொழியின் திரையரங்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட 25 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது என்று ‘Ormax Media’ நிறுவனத்தின் இந்த ஆய்வுகள் கூறியுள்ளன.
+ There are no comments
Add yours