Indian Railways: ஜூலை 20 வரை இந்த ரயில்கள் ரத்து -அதன் முழு விவரம்.!

Estimated read time 1 min read

Cancel Trains List: நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால், தென்கிழக்கு ரயில்வே ரயில்களை ரத்து செய்துள்ளது. அதன் விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

புது டெல்லி:

தென்கிழக்கு ரயில்வே தரப்பில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தாலோ? முன்பாதி ரயில் டிக்கெட் புக்கிங் செய்திருந்தாலோ கண்டிப்பாக இது உங்களுக்கான செய்தி. ரயில் தடங்களில் பழுது பார்க்கபடுவதால், சில ரயில்களை ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஜாம்ஷெட்பூர், ஜாஸ்ன். சக்ரதர்பூர் கோட்டத்தில் உள்ள ரூர்கேலா மற்றும் ஜார்சுகுடா நிலையங்களுக்கு இடையே ப்ரீ-நோன் இன்டர் லாக்கிங் மற்றும் நோன் இன்டர் இன்டர் லாக்கிங் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எங்காவது செல்ல ரயிலில் பயணம் செய்யத் தயாராகிவிட்டால், முதலில் ரயில்களின் நிலையை அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் டாடாநகர் ரயில் நிலையத்தில் இருந்து பல ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்படும்.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம்

08167 ரூர்கேலா முதல் ஜார்சுகுடா மெமு பயணிகள் சிறப்பு ரயில் ஜூலை 11 முதல் 19 வரை ரத்து செய்யப்படுகிறது.

08168 ஜார்சுகுடா முதல் ரூர்கேலா மெமு பயணிகள் சிறப்பு ரயில் ஜூலை 11 முதல் 20 வரை ரத்து செய்யப்படுகிறது.

டாடாநகரில் இருந்து இத்வாரி செல்லும் 18109 இத்வாரி எக்ஸ்பிரஸ் ஜூலை 11 முதல் 19 வரை டாடாநகரில் இருந்து ரத்து செய்யப்பட்டது.

18110 இட்வாரியில் இருந்து டாடாநகருக்கு வரும் இத்வாரி டாடா எக்ஸ்பிரஸ் ஜூலை 11 முதல் 19 வரை ரத்து செய்யப்படுகிறது.

18175 ஹதியா ஜார்சுகுடா மெமு எக்ஸ்பிரஸ் ஜூலை 11 முதல் 19 வரை ஹதியாவில் ரத்து செய்யப்பட்டது.

18176 ஜார்சுகுடா ஹாடியா மெமு எக்ஸ்பிரஸ் ஜார்சுகுடாவிலிருந்து ஜூலை 11 முதல் 20 வரை ரத்து செய்யப்பட்டது.

18107 ரூர்கேலா ஜக்தல்பூர் எக்ஸ்பிரஸ் ரூர்கேலாவிலிருந்து ஜூலை 11 முதல் 19 வரை ரத்து செய்யப்பட்டது.

18108 ஜக்தல்பூர் ரூர்கேலா எக்ஸ்பிரஸ் ஜக்தல்பூரில் இருந்து ஜூலை 11 முதல் 20 வரை ரத்து செய்யப்படுகிறது.

சம்பலேஸ்வரி மற்றும் இஸ்பாட் எக்ஸ்பிரஸ் இடைநிறுத்தம்

பிலாஸ்பூர் கோட்டத்தில் இண்டர் லாக்கிங் அல்லாத பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், 18109 இத்வாரி எக்ஸ்பிரஸ் டாடாநகரில் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தவிர, ஹவுராவிலிருந்து ஜக்தல்பூருக்குச் செல்லும் 18005 சம்பலேஷ்வரி எக்ஸ்பிரஸ் சம்பல்பூரில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேல் சம்பலேஸ்வரி எக்ஸ்பிரஸ் இயங்காது. 12871 ஹவுரா காந்தபாஜி திட்லாகர் இஸ்பாட் எக்ஸ்பிரஸ் பாலங்கிர் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் பலங்கிருக்கு அப்பால் செல்லாது. தென்கிழக்கு ரயில்வே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

                                                                                                                    – Shiva Murugesan

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours