பெயர் பலகை இல்லாத டயர் எரிக்கும் கம்பெனி..! கண்டித்த மக்களுக்கு மிரட்டல்.!!

Estimated read time 1 min read

வேடசந்தூர்:

வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் தென்னம் பட்டி ஊராட்சிக்குட்பட்ட குரும்பபட்டி ஆண்டிபட்டி கிராமத்தில் பெயர் பலகையே இல்லாமல் அரசு அனுமதி இன்றி அரசுக்கு புறம்பாக டயர் எரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது.

இதனால், வெளி வரும் கரும்புகை யினால் கம்பெனி அருகில் உள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் உள்ள மக்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் மிகுந்த அளவில் வியாதிகளையும் வேதனைகளையும் அனுபவிக்கின்றனர். மேலும், ஆஸ்துமா நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோழி, ஆடு, மாடு போன்ற விலங்குகள் இதனால் பாதிக்கப்பட்டு தானாக இறந்து விழுகின்றன.

இதனை, கண்டித்து பெயர் பலகை இல்லாத இந்த கம்பெனி ஆட்களிடம் பலமுறை கூறியும் இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இதனால் உனக்கு என்ன என்று ஆட்களை விட்டு மிரட்டியும் வருகிறார்கள். இதைப் பற்றி முதலமைச்சர் அவர்களுக்கு குறுஞ்செய்தியாகவும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனுமுகமாக தெரிவித்தும் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

இதனால், 02.07.2022 சுமார் ஐந்து மணி அளவில் பெயர் பலகை இல்லாத கம்பெனி அருகில் உள்ள ஊர் மக்கள் மற்றும் ஆண்டிபட்டி ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு முற்றுகை போராட்டம் செய்தனர். இதனை, காவல்துறையினர் ஊர் மக்களிடம் காவல் துறையில் மனு அளித்துவிட்டு பின்பு நீங்க போராட்டம் நடத்துங்கள் அனுமதி இன்றி போராட்டம் நடத்தக்கூடாது இப்பொழுது கலந்து செல்லுங்கள் என கூறி கலைத்து விட்டார். இது இதனை கண்டித்து நமது திமுக ஆட்சி கண்டு கொள்ளுமா அல்லது அத்திபட்டி கிராமம் போல் அழிந்து விடுமா கேள்விக்குறியாக உள்ளது. அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

                                                                                                                  – Manoj kumar

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours