இந்த சீரியல் பார்க்கிற எல்லாருமே இதை அவங்களுடைய குடும்பமாகத்தான் பார்க்கிறாங்க. நான் சின்ன வயசில ஹீரோவாக ஆகியிருந்தால் இப்படியான கேரக்டர் எனக்குக் கிடைச்சிருக்குமான்னு தெரியல. இந்த சீரியல் எல்லாமே கலந்த கலவையா இருக்கு. எனக்கு ஆக்டிங் ஸ்கோப் நிறையவே இருக்கு. சினிமாவில் கதாநாயகனுக்கு அப்பா, கதாநாயகிக்கு அப்பான்னு நிறைய பண்ணியிருக்கேன். ஆனா, இந்த சீரியல் அது மாதிரி நார்மலான அப்பாவாக இல்ல. ஆக்ஷன் ஹீரோ, சென்டிமென்ட், ரொமான்ஸ், காமெடின்னு எல்லாமே கலந்து கட்டி பண்றேன். ரெண்டு நாளில் சிலம்பம் கத்துக்கிட்டு இந்த சீரியலில் சிலம்பமும் சுத்தியிருக்கேன்னா பார்த்துக்கோங்களேன்!
நான் ஒர்க் பண்ணின பெரும்பாலான படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டாகவும், நடிகராகவும் இருந்திருக்கேன். ஹீரோயினைக் கட்டிக்கிறவங்கதான் ஹீரோன்னா ‘காதல்’ படத்துல நான் தாங்க ஹீரோ! அந்தப் படத்தில் சந்தியாவை செலக்ட் பண்ணினதே நான்தான்! அவங்க அம்மா ஒரு பியூட்டி பார்லர் வச்சிருந்தாங்க. அங்கதான் சந்தியாவை செலக்ட் பண்ணினேன். ஆனா, நான் கேட்டப்ப அவங்க நடிக்க சம்மதம் சொல்லலை. பிறகு எப்படியோ ஓகே சொன்னாங்க” என்றவரிடம் அடுத்தக்கட்ட திட்டம் குறித்துக் கேட்டோம்.
+ There are no comments
Add yours