மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை நடிகர் பிரபு திடீரென சந்தித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி, மதுரை சத்யசாய் நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் மகன் துரை தயாநிதியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த நடிகர் பிரபு, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார்.
அண்மையில் மதுரைக்கு சென்றிருந்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரியை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், நடிகர் பிரபு, மு.க. அழகிரியின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார்.
பிரபு – அழகிரி சந்திப்பின் பின்னணி என்ன என்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், “சிவாஜியின் தீவிர ரசிகர் மு.க. அழகிரி. அதனால் சிவாஜியின் மகனென்ற முறையில் பிரபு அவரை நேரில் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே” என அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours