நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பிரபுதேவாவுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடிப்பில் ‘3’, கௌதம் கார்த்தி நடிப்பில் ‘வை ராஜா வை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். அதன்பிறகு வெகு நாட்களாக சினிமாவில் ஆர்வம் காட்டாத நிலையில் சமீபத்தில் இவர் இயக்கிய ‘முசாபிர்’ ஆல்பம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக ‘லால் சலாம்’ படத்தினை இயக்க உள்ளார்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்க உள்ளார்கள். மேலும், ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் கேமியோவாக வர உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
இதற்கிடையில் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குநரும் நடிகரும் நடன அமைப்பாளருமான பிரபுதேவா உடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ரப்பர் மேன் பிரபுதேவா அண்ணாவுடன் சில ராப் ஸ்டைல் உடற்பயிற்சி” என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours