விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்.
நடிகர் விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கினார். 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து வென்றதை அடுத்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் விஜயகாந்த்.
தமிழ்நாட்டில் மாற்று அரசியலுக்கான முகமாக விஜயகாந்த் இருப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென அவரது பாதையில் சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து அக்கட்சியின் வாக்கு வங்கி சரிய விஜயகாந்த்தின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.
இதனையொட்டி அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்ட விஜயகாந்த்துக்கு உடல்நலம் சற்று தேறியது. இருந்தாலும் பரப்புரையிலோ, பொதுக்கூட்டங்களிலோ கலந்துகொள்ளாமல் இருந்தார் விஜயகாந்த்.
இந்தச் சூழலில் கடந்த 14ஆம் தேதி சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு நீரிழிவு நோய் காரணமாக விஜயகாந்த்துக்கு கால் விரல்கள் அகற்றப்பட்டன. அவருக்கு காலில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
— Vijayakant (@iVijayakant) June 21, 2022
விஜயகாந்த்துக்கு கால் விரல்கள் அகற்றப்பட்ட தகவல் அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் அவர் உடல்நலம் திரும்பவேண்டுமென்று பிரார்த்தித்துவருகின்றனர்.
எனது அருமை நண்பர் கேப்டன் @iVijayakant அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) June 21, 2022
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், எனது அருமை நண்பர் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார். பிரேமலதா விஜயகாந்தை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட அவர், விஜயகாந்த் விரைந்து நலம் பெற்று திரும்ப வேண்டிக் கொள்வதாக கூறினார்.
– க. விக்ரம்
+ There are no comments
Add yours