இவர் ஆரம்ப காலகட்டத்தில் தொகுப்பாளினியாகவும் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பயணித்துக் கொண்டிருப்பவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.
“சின்ன வயசில ஏதோ சொந்தக்காரங்க கல்யாணத்துல ஆடச் சொன்னாங்க. அப்படி ஆடினதைப் பார்த்துட்டு தொடர்ந்து ஆடச் சொன்னாங்க. கல்யாண வீடுகளில், கோயில் திருவிழாக்களில் கச்சேரிகளுக்குத்தான் ஆடப் போனேன். அப்ப நான் ஏழாம் வகுப்பு படிச்சிட்டு இருந்ததால தொடர்ந்து என்ன பண்ணுவ, எப்படி பெரியப் பொண்ணாகி ஆடுவன்னுலாம் வீட்ல சொல்ல ஆரம்பிக்கவும் ஆடத் தானே கூடாது, அப்பப் பாடுறேன்னு ஆரம்பச்சதுதான் சிங்கிங். எங்க வீட்ல யாருக்கும் மியூசிக் பற்றித் தெரியாது. எனக்குத் தாள ஞானம் நேச்சராகவே இருந்தது. ஆனா, ஸ்ருதிதான் சேரல. ஆரம்பத்தில் ஸ்ருதில பாடுன்னு சொல்லுவாங்க. ‘ஸ்ருதின்னா என்ன?’ன்னு கேட்டுட்டு இருப்பேன். அதுக்கப்புறம் நானாகக் கேள்வி ஞானத்துல பாட்டு கத்துக்க ஆரம்பிச்சேன்.
+ There are no comments
Add yours