2/3/2023 12:36:05 PM
ட்ரீம் வேர்ல்ட்ஸ் கம்பெனி தயாரிக்கும் படம், ‘SBM 1. THE PAST’. இதில் சோமன் பாலமுனி (SBM) என்ற கேரக்டரில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக ரஞ்சித் நடிக்கிறார். மற்றும் ‘டூரிங் டாக்கீஸ்’ காயத்ரி, நெல்லை சிவா, மீசை ராஜேந்திரன், செவ்வாழை ராஜ், பிரேம் குமார், விஜயகுமார், துரைராஜ், ராஜ்குமார், யாமினி நடிக்கின்றனர். சி.தேவநந்தன் தயாரித்து இயக்கி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
3 மாறுபட்ட காலங்களில் நிகழும் குற்றச்சம்பவங்களின் நான்-லீனியர்-கட் டூ கட் என்ற திரைக்கதை யுக்தியில் உருவாக்கப்படும் இப்படத்துக்கு விஜயன், அண்ணாதுரை, டைட்டன் முருகேஷ் ஒளிப்பதிவு செய்கின்றனர். ஆழ்வார், ஜேக்கப் சாமுவேல் இசை அமைக்கின்றனர். ஆரோன் பின்னணி இசை அமைக்கிறார். சோமன், சந்திரமதி பாடல்கள் எழுதுகின்றனர். ஈரோடு, ஊட்டி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
+ There are no comments
Add yours