‘டிரோல்’களுக்கு பதிலடி கொடுத்த தமன்
06 பிப், 2023 – 10:24 IST
விஜய் நடிப்பில் வெளிவந்த ‘வாரிசு’ படத்தின் இசையமைப்பாளர் தமன், தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். தெலுங்கில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திற்கும், த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்திற்கும் இசையமைக்கிறார்.
இரு தினங்களுக்கு முன்பு மகேஷ்பாபு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தமனுக்கு எதிராக பல பதிவுகளைப் பதிவிட்டு டிரெண்டிங் செய்தனர். மகேஷ்பாபு நடித்து இதற்கு முன்பு வெளிவந்த ‘சர்க்காரு வாரி பாட்டா’ படத்திற்கு தமன் தான் இசையமைத்திருந்தார். அப்படத்தில் இடம் பெற்ற ‘கலாவதி’ பாடல் மட்டும்தான் ஹிட்டானது. படத்திற்கான பின்னணி இசையும் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை.
அடுத்து த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்திற்கும் தமன் தான் இசை என்ற அறிவிப்பு வந்ததிலிருந்தே மகேஷ்பாபு ரசிகர்கள் தமன் படத்தில் வேண்டாம் என்று சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் தனக்கு எதிராகப் பதிவு செய்த ‘டிரோல்’களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக “நெகட்டிவிட்டி…. ஆழ்ந்த இரங்கல்…. அங்கிருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும்,” எனப் பதிவிட்டு, ‘கெட் லாஸ்ட்’ என்ற ஆடியோவுடன் டுவீட் செய்துள்ளார் தமன்.
+ There are no comments
Add yours