Engga Hostel Review: `…ண்ணோவ் விட்ருண்ணா…’ இது என்னடா இன்ஜினியரிங் காலேஜுக்கு வந்த சோதனை! | Engga Hostel Review: This College Story offers nothing new except a few laughs

Estimated read time 1 min read

சித்தப்புவாக அவினாஷ் ரமேஷ், அஜய்யாக சச்சின் நாச்சியப்பன், அஹானாவாக சம்யுக்தா விஸ்வநாதன், ராஜதிலகமாக சரண்யா ரவிச்சந்திரன், செந்திலாக கௌதம் ராஜ், ஜெய வீரபாண்டியன் என்னும் பாண்டியாக ‘பரிதாபங்கள்’ டிராவிட் செல்வம் என மாணவர் படை இருக்க, இவர்களுடன் காலேஜ் பணியாளர்களாக லொள்ளு சபா சேஸூ, ராஜ் கிருஷ்ணன் எனச் சிலர் அவ்வப்போது அட்டெண்டன்ஸ் போடுகின்றனர். இவர்களில் நமக்குப் பரிச்சயப்பட்ட முகங்களான டிராவிட்டும், சரண்யாவும் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியிருக்கின்றனர். இவர்களைத் தாண்டி நடிப்பில் நல்ல பர்சன்டேஜ் வாங்கியிருப்பது அஜய்யாக வரும் சச்சின் மட்டுமே. மற்றவர்கள், ஒன்று பார்டரில் பாஸாகி இருக்கிறார்கள், அல்லது கூடுதலாகச் சொதப்பி அரியர்ஸ் வைத்திருக்கிறார்கள்.

Engga Hostel Review | எங்க ஹாஸ்டல் விமர்சனம்

Engga Hostel Review | எங்க ஹாஸ்டல் விமர்சனம்

சித்தப்பு, சாங், அஜய் என ஒரு சில கதாபாத்திரங்களின் ஸ்கெட்ச் மட்டும் ரசிக்க வைக்கிறது. அதைத் தாண்டி 30 நிமிட எபிசோடுகளில் பெரும்பாலும் சுவாரஸ்யமற்ற காட்சிகளே நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக, அடல்ட் வசனங்கள் அதிகம் இடம்பெற்ற இந்தி வெர்ஷனிலிருந்து சற்றே காரம் குறைத்து தமிழுக்கு ஏற்றவாறு எடுக்கிறேன் என்ற முயற்சியால் சில இடங்கள் மட்டுமே சிரிக்க வைக்கின்றன.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours