பிரபல தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் காமெடி நடிகருமான டி. பி. கஜேந்திரன் (68) உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.பி. கஜேந்திரன் சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார்.
பல்வேறு திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ள இவர் பழம்பெறும் நடிகை டி.பி. முத்துலட்சுமி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் விசுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய டி. பி. கஜேந்திரன், விசுவை போன்றே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழ் திரையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில், இயக்குநர் டி. பி. கஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர் டி.பி.கஜேந்திரன் அவர்கள் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
“பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர் திரு. டி.பி.கஜேந்திரன் அவர்கள் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
1/2 pic.twitter.com/YNVhpAgBab
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 5, 2023
எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன்.
தற்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது. திரு. டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours