பிக் பாஸ் 6 நாள் 96: விருந்தினர்களிடமும் எகிறிய அசிம்; வீடு முழுவதும் வெடித்த மேக்கப் பிரச்னை! | Bigg Boss Tamil Season 6 Day 96 Highlights: Azeem fights with the guests

Estimated read time 1 min read

அபூர்வமாக வெளிப்பட்ட விக்ரமனின் சென்ஸ் ஆஃப் ஹியூமர்

“ஒரு பொண்ணுகிட்ட லவ் ப்ரபோஸ் பண்ணனும்… எப்படிப் பண்ணுவீங்க?” என்று முத்துவிடம் கேட்டுக் கலாய்த்துக் கொண்டிருந்தார் அமுதவாணன். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆர்யா மாதிரி ‘உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னே தெரியல’ என்று விதம் விதமாக முத்து தவித்துக் கொண்டிருக்க, மைனா அவரைக் கூடுதலாகக் கலாய்த்து ‘உண்மையான பையனா இருக்கணும்” என்று எடுத்துக் கொடுக்க இந்தச் சமயத்தில் விக்ரமன் அடித்த கமென்ட் ஆச்சரியம். “அதுக்கு அவர் பையனே இருக்கான்” என்று டைமிங்கில் சொல்லச் சபை வெடித்துச் சிரித்தது. (அடடே! சப்ஜெக்ட்டுக்குள்ள ஹியூமர் சென்ஸூம் இருக்குப்பா!).

பிக் பாஸ் 6 நாள் 96

பிக் பாஸ் 6 நாள் 96

ராக் மியூசிக் ஒலிக்க, ரகளையான கலர் கொண்ட டீஷர்ட்டை அணிந்து ராம் உள்ளே நுழைந்தார். ஃப்ரீஸில் நின்றிருந்த ஒவ்வொருவரையும் கட்டியணைத்து விசாரித்தார். ‘ரிலீஸ் பண்ணுங்க பிக் பாஸ்’ என்று ஏடிகேவின் நட்பு மீசை அதிகமாகத் துடித்தது. ‘உன் விழிகளில்’… என்கிற பாடல் அடுத்து ஒலிக்க ‘ஆயிஷாதான் வரா’ என்று உறுதியாக யூகம் செய்தார் மைனா. ஆனால் கையில் வெடிகுண்டுடன் வந்தது, ஷெரினா.

ராஜாங்கம் டாஸ்க்கில் சோற்றில் உப்பைப் போட்டு ஷவின் செய்த குறும்பு பிறகு பெரிய அளவில் வெடித்தது. அதைப் போலவே இம்முறையும் அவர் சாதாரணமாகச் செய்த குறும்பு, பிறகு பெரிய சண்டையாக மாறியது. ‘தியாகம் செய்யும் டாஸ்க்கின் படி’ அசிம் ஒப்பனை செய்யக்கூடாது. முகம் கூட கழுவக்கூடாது. லுங்கி, பனியனில்தான் இருக்க வேண்டும். இதை முதலில் ஒப்புக் கொண்ட அசிம், பிறகு ‘சந்தைக்குப் போகணும்… ஆத்தா வையும்… காசு கொடு’ என்கிற கதையாக ‘பிக் பாஸ்… இந்த டிரஸ் வேணாம்’ என்று தனியாகச் சென்று அனத்திக் கொண்டே இருந்தார். ஒப்பனை செய்யாததால் அவருடைய கண்களின் கீழே கறுப்பாகத் தெரிந்தது. எனவே அவர் பாத்ரூமிற்குச் சென்று ரகசியமாக, லைட்டாக மேக்கப் போட்டுக் கொள்கிறாரோ என்கிற சந்தேகம் வீட்டாருக்கு எழுந்தது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours