கொரோனா தொற்று எண்ணிக்கை சில மாநிலங்களில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் ரிமோட் மற்றும் ஹைப்ரிட் மாடல் தான் அனைத்து துறைகளுக்கும் கடைப்பிடிக்க வேண்டி ஒன்றாக மாறிவிட்டது.
டிஜிட்டல் தான் எதிர்காலம் என்பதால், தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் டிஜிட்டல் திறன் கொண்ட பணியாளர்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக உள்ளது.
இதேநேரத்தில் விலைவாசி, செலவுகள் நிறுவனங்களுக்கு அதிகரித்து வரும் வேளையில் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரையில் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
நகரங்கள்
டெக் மற்றும் டிஜிட்டல் துறை ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் இதேவேளையில், பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்தே குறிப்பாக சொந்த ஊரில் இருந்தே பணியாற்ற திட்டமிடுகின்றனர். இதனால் நிறுவனங்கள் அதிகளவிலான ஊழியர்களைச் சிறு நகரங்களில் இருந்து தேர்வு செய்து அதே பகுதியில் அலுவலகத்தை அமைக்க திட்டமிட்டு உள்ளது.
2ஆம், 3ஆம் தர நகரங்கள்
இதன் மூலம் திறன் வாய்ந்த ஊழியர்கள் பற்றாக்குறையை குறைக்க முடியும் இதனால் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் அலுவலகத்தை அமைத்து இப்பகுதியில் இருக்கும் திறன் வாய்ந்த மாணவர்கள் ஊழியர்களை தேர்வு செய்யவும், குறிப்பாக கிராமப்புறங்களில் இருப்பவரை பணியில் அமர்த்த பல நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
முக்கிய நகரங்கள்
இத்திட்டத்தின் படி முன்னணி நிறுவனங்கள் தற்போது ஜெய்ப்பூர், ஹைதரபாத், கோவை, இந்தோர், கொச்சி, சேலம், ஈரோடு போன்ற 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் மூலம் வேவைவாய்ப்பு சந்தையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும்.
உள் கட்டமைப்பு
ஆனால் இதற்கு ஏற்றார் போல் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் தனது உள் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் இல்லையெனில் புதிய நிறுவனங்களை ஈர்க்க முடியாது.
+ There are no comments
Add yours