சேலம்:
சேலம் மாவட்டத்தில், செய்முறை தேர்வு மதிப்பெண்களை குறைத்து விடுவதாக மிரட்டி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகக் கூறப்படும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
தாரமங்கலத்தில் உள்ள அந்த தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியரான விஜயகுமார் என்பவர் பல மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கேள்வி பட்ட முன்னாள் மாணவர் ஒருவர் வாட்ஸப் குழுவில் தன்னுடன் படித்த சக மாணவர்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பெற்றோரும், முன்னாள் மாணவர்களும் அந்த பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவிகளிடம் விசாரணை நடத்திய மகளிர் போலீசார் தலைமை ஆசிரியர் விஜயகுமாரை கைது செய்தனர்.
+ There are no comments
Add yours