Ammonia Gas Leak : அம்மோனிய வாயுவை சுவாதித்ததால் பாதிக்கப்பட்ட பெண்கள்..!

Estimated read time 1 min read

விசாகப்பட்டிணம்:

பிராண்டிக்ஸ் இந்தியா அப்பேரல் நிறுவனத்தின் இரண்டாவது பிரிவான குவாண்டம் சீட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அம்மோனியம் வாயுவை சுவசித்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) விஷ வாயு கசிவு ஏற்பட்டது. அப்போது இந்த வாயுவை சுவாசித்ததால் பெண்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம், அனகப்பள்ளி காவல்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய (Pollution Control Board) அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

முதலில், அருகில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா வாயு கசிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்த விஷ வாயு, காற்றின் காரணமாக சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நோக்கி வீசியிருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன. இதனால் பெண்கள் விஷவாயுவை சுவாசிக்க நேர்ந்தது.

பெண்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடனே, அவர்கள் சிகிச்சைக்காக அனகாப்பள்ளி மற்றும் SEZ மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். வயிற்று வலி, கண்களில் எரியும் உணர்வு, குமட்டல் உட்பட பல்வேறு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால்  அருகிலுள்ள ரசாயன ஆலையிலிருந்து வாயு கசிந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த ரசாயன பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“சந்தேகத்திற்குரிய ரசாயன தொழிற்சாலையில் கசிவு ஏற்பட்டிருந்தால், அதன் ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆனால் இரசாயன ஆலையில் நிலைமை சாதாரணமாக உள்ளது. எனவே, சந்தேகத்திற்கிடமான வாயுக் கசிவு என்ற விஷயம் மர்மமாகவே உள்ளது” என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.

மாவட்ட நிர்வாகத்தின் ஆதாரங்களின்படி, ரசாயன ஆலையின் ஏசி யூனிட் அல்லது கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் ஏதேனும் வாயு கசிவு உள்ளதா என்பதை அவர்கள் சரிபார்க்கிறார்கள். அந்த பிரிவில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது

இந்த சம்பவம் குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் ரவி சுபாஷ், விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இரண்டு பெண்களைத் தவிர மற்ற அனைவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours