சென்னை:
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்றுள்ள அரசு நிகழ்ச்சி இது.கல்வி, பொருளாதாரம், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு சிறப்பாக விளங்குகிறது அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியையே திராவிட மாடல் என்று கூறுகிறோம்.
மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் நிதிப்பங்கீடு காலப்போக்கில் மாறும் ஒன்றிய அரசின் திட்டங்களில் மாநில அரசின் பங்கு அதிகம்.ஒட்டுமொத்த இந்திய நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. ஹிந்திக்கு இணையான தமிழ் மொழியை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.
சாலை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு காலப்போக்கில் குறைக்கப்படுகிறது.வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி இந்திக்கு நிகராக அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். நீட் விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டுமென பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
கட்சத்தீவை மீட்டெடுத்து உரிமையை நிலைநாட்ட இது தகுந்த தருணம்.நீட் விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டுமென பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
ஒன்றிய அரசின் நிதி குறைப்பால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை ₹14,000 கோடியை விரைந்து வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடிக்கு நன்றி என கூறினார்.
+ There are no comments
Add yours