`உனது வெளிச்சத்தில் காதலிக்கக் கற்றுக்கொண்டேன்’ – கே.எல்.ராகுலை திருமணம் செய்த அதியா ஷெட்டி I Bollywood actor Sunil Shetty’s daughter Athiya Shetty is married to cricketer KL Rahul

Estimated read time 1 min read

திருமணத்திற்கு பிறகு அதியா ஷெட்டியும், கே.எல்.ராகுலும் சேர்ந்து வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், `இன்று நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டில் திருமணம் செய்து கொண்டோம். அது எங்களுக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுத்தது. நன்றியுணர்வும், அன்பும் நிறைந்த இதயத்துடன் இந்த ஒற்றுமை பயணத்தில் உங்கள் ஆசிர்வாதங்களைக் கோருகிறோம்’ என்று தெரிவித்திருந்தனர். இதே போன்று அதியா ஷெட்டி தனியாக பதிவிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், `உனது வெளிச்சத்தில் காதலிக்கக் கற்றுக்கொண்டேன். இன்று எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம்’ என்று குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இருவரும் கணவன் மனைவியாக பத்திரிக்கையாளர்களின் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். சோசியல் மீடியாவில் திருமண தம்பதிக்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours