‘அஜித் 62’ படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கமா? – ‘நீதி’ கேட்கும் ஹேஷ்டேக் பதிவுகள் | Ajith Kumar’s AK62 to be directed by Magizh Thirumeni, Vignesh Shivan out

Estimated read time 1 min read

அஜித்தின் ‘ஏகே 62’ படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘துணிவு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித்குமார் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. விக்னேஷ் சிவனும் இதனை உறுதி செய்திருந்தார்.‘ஏகே 62’ என அழைக்கப்படும் இப்படத்தில் நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்திலும், அரவிந்த் சாமி வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும், பிப்ரவரி மாதம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கும் என தகவல் வெளியான நிலையில், தற்போது ‘ஏகே62’-ல் இலிருந்து விக்னேஷ் விலகியிருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக இயக்குநர் மகிழ் திருமேனி படத்தை இயக்க இருப்பதாகவும், லைகா இப்படத்தை தயாரிக்க உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன.

இதற்கான காரணம் வெளியாகாத நிலையில், ட்விட்டரில் இந்தச் செய்திகளை அடிப்படையாக கொண்டு ‘ஜஸ்டிஸ் ஃபார் விக்னேஷ்சி வன்’ (#JusticeforVigneshShivan) என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. ஏனினும், அஜித்தின் அடுத்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட் வெளியாவதன் மூலம் உண்மைத் தன்மையை அறிய முடியும்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours