“கமல் சார் அணிந்திருக்கும் ஆடை எங்கள் கே.ஹெச் ஹவுஸ் பிராண்டுதான். பிக்பாஸ் இறுதிப்போட்டி என்பதால், கமல் சார் ஆடையை சிறப்பாக வடிவமைக்கத் திட்டமிட்டோம். இந்தமுறை ‘நான் டெனிம் போடுறேன். ஜாக்கெட் மாதிரியான ஆடை வேண்டும்’ என்றார் கமல் சார். அதனால்தான், கதர் டெனிமிலேயே ஜாக்கெட்டை வடிவமைத்தேன். டெனிமில் இந்தக் கலெக்ஷனுக்குப் பெயர் Chaos. ரொம்ப ஸ்பெஷலான கலெக்ஷன். ஓவியர் பிகாசோ, ‘Chaos வடிவத்தில் இருப்பதுதான் கலை’ என்பார். இந்தக் கலெக்ஷனில் ஒவ்வொரு டிசைனும் வித்யாசமா இருக்கும். அதற்கேற்றதுபோல், கமல் சார் ட்ரெஸ்ஸை முழுக்க முழுக்க கைகளாலேயே வடிவமைத்தேன். மெஷினுக்கே செல்லவில்லை. எம்பிராய்டிங் கூட கைகளால்தான் போட்டேன்.
வடிவமைப்பையெல்லாம் முடித்துவிட்டு கலை இயக்குனர் ஜாக்சனிடம் பெயிண்ட் பண்ணக் கொடுத்தேன். ‘விசாரணை’, ‘வட சென்னை’, ‘அசுரன்’ பத்திற்கெல்லாம், ஜாக்சன் தான் கலை இயக்குனர். நான், ‘வட சென்னை’ படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றும்போது நண்பரானார். அவர், பெயிண்டிங் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது. அதனால், ‘இந்தமாதிரி டிசைன்ல பெயிண்ட் பண்ணனும்’னு சொல்லிக் கொடுத்தேன். இரண்டே நாட்களில் கமல் சாரின் பேன்ட்- ஜாக்கெட்டிற்கு பெயின்ட் அடித்துக் கொடுத்துவிட்டார் ஜாக்சன். எல்லாம் முடித்தபிறகு, கமல் சாருக்கு இந்த ட்ரெஸ் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சனிக்கிழமை பிக்பாஸ் ஷூட்டிங்.
+ There are no comments
Add yours