இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். பல்வேறு தொழிகளில் முதலீடு செய்திருக்கும் அவர், விரைவில் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. முதல் படம் தமிழில் எடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இப்போது தோனியின் தயாரிப்பாளர் பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தோனியின் முதலீடுகள்
தோனி இப்போது கார், வாகனம், ஆடை, விவசாய உற்பத்தி உள்ளிட்ட பல நிறுவனங்களின் முதலீடு செய்திருக்கிறார். வளர்ந்து வரும் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்து வரும் தோனிக்கு சொந்தமான பீர் கம்பெனி ஒன்றும் இருக்கிறது. கார்ஸ் 24 என்ற வாகன நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் அவர், கருங்கோழி பண்ணை ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் படிக்க | சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்து.. “அயலி” வெப்தொடர் எப்படி உள்ளது? விமர்சனம்!
தமிழ் சினிமா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவர் இந்த ஆண்டுடன் முழுமையாக கிரிக்கெட்டுக்கு விடை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பல்வேறு பிஸ்னஸ்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் தோனி, சினிமா தயாரிப்பிலும் இறங்க முடிவு செய்திருந்தார். சென்னை மீது இருக்கும் ஆர்வம் காரணமாக தன்னுடைய தோனி என்டர்டெயின்மென்ட் சார்பில் முதல் படத்தை கோலிவுட்டில் எடுக்க இருக்கிறார்.
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) January 27, 2023
லெட்ஸ் கெட் மேரிட்
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பிக்பாஸ் பிரபலம் ஹரீஸ் கல்யாண் ஹீரோவாகவும், லவ்டுடே பிரபலம் இவானா ஆகியோர் லீட் ரோலில் நடிக்கின்றனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபு நடிக்க இயக்குநர் ரமேஷ் தமிழ் மணி இந்தப் படத்தை இயக்குகிறார். படத்திற்கு ’லெட்ஸ் கெட் மேரிட்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தமிழில் வித்தியாசமான முயற்சி… பிரபலங்கள் கொண்டாடும் அயலி வெப்-சீரிஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours