அண்மைக் காலமாக இந்திப் படங்களை தென்னிந்திய மொழிப் படங்கள் வீழ்த்திவருகின்றன.
ஒரு காலத்தில் இந்தியப் படங்கள் என்றால் இந்தி மொழி படங்கள்தான் என்ற நிலை காணப்பட்டது. இந்தியில் ஹிட் ஆன படங்கள் மட்டுமே இந்தியப் படங்கள் என்ற நிலை இருந்தது.
எனினும் அத்திப் பூத்தார் போல் சில படங்கள் தேசிய அளவில் ஹிட் அடித்தன. அந்த வரிசையில் கமல்ஹாசனின் ஏக் துஜே கேலியே, ரஜினிகாந்தின் எந்திரன் உள்ளிட்ட படங்கள் அந்த வரிசையில் இருந்தன.
தற்போது இயக்குனர் ராஜமௌலியின் வரவுக்கு பின்னர் தென்னிந்திய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடித்துவருகின்றன.
முன்னதாக ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் ஆமிர் கானின் தங்கல் படம் மட்டுமே இணைந்திருந்தது. தற்போது பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களுடன் கேஜிஎஃப்-2 இணைந்துள்ளது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பாவும் மாபெரும் வெற்றி பெற்றது. யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் இரண்டாம் பாகமும் இந்தியா முழுக்க பிரபலமடைந்துள்ளது. ஆக, வட இந்தியாவிலும் தென்னிந்தியப் படங்கள் கால்ஊன்றி வருகின்றன.
நீல் சோப்ரா இயக்கத்தில் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் இரண்டாம் பாகம் இந்தியில் மட்டும் ரூ.416.60 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours