சென்னை :
மே ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள ரயில்வே தேர்வுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் குளறுபடி நடந்துள்ளதாகவும், நாமக்கல்லில் விண்ணப்பித்த ஒரு மாணவருக்கு கர்நாடக மாநிலம் உடுப்பியில் தேர்வு மையத்தில் தேர்வு எழுத அழைப்பு வந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வேயில் 24 ஆயிரத்து 1649 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் இரண்டரைக் கோடி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வுகள் மே மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது விண்ணப்பதாரர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தேர்வர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் பல விண்ணப்பதாரர்களுக்கு ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பகுதிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அதாவது நாமக்கல்லில் விண்ணப்பித்த ஒரு மாணவருக்கு கர்நாடக மாநிலம் உடுப்பியிலும், ஈரோட்டில் விண்ணப்பித்த ஒரு மாணவருக்கு ஆந்திர மாநிலம் நெல்லூரில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மாணவர்கள் தமிழக அரசு மற்றும் பிற அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முதல்நிலைத் தேர்வில் இதேபோல பிரச்சினை எழுந்த நிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
-Rajkumar R
+ There are no comments
Add yours