செங்கோட்டை:
செங்கோட்டை அருகே ஓடும் பஸ்சில் படிக்கட்டில் சாகச பயணம் செய்த இரு மாணவர்கள் கீழே விழுந்து காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியரையில் இருந்து செங்கோட்டைக்கு சென்ற அரசு பஸ்சில் உள்ளே இடமிருந்தும் படியில் தொங்கியபடி சில மாணவர்கள் பயணம் செய்தனர். இதில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த இரு மாணவர்கள் திடீரென கீழ விழுந்து படுகாயமடைந்தனர். இதைத்தொடர்ந்து காயமடைந்த மாணவர்கள் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
+ There are no comments
Add yours