உத்தர பிரதேசம்:
உத்தர பிரதேசம் மாநிலம் கோட்வாலி பகுதியில் இளம் பெண் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில் அப்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அந்தபெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் போலிஸார் அந்தப்பெண்ணை சோதனை செய்த போது, அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் கைத்துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலிஸார் அவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த பெண் புல்பாரியில் வசிக்கும் கரிஷ்மா யாதவ் என்பதும் அவர் பள்ளி ஆசிரியையாக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. மேலும், துப்பாக்கியுடன் சுற்றுவதை குறித்து கேட்டபோது, அவர் கூறிய விளக்கம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கரிஷ்மா யாதவின் பெற்றோர் கடந்தாண்டு பிப்ரவரியில் இறந்துவிட்டநிலையில் இவர் தந்தைக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க உறவினர்கள் முயற்சித்து செய்து வருவதாகவும் அதனால் நான் தன்ஹார் பகுதியில் வசிக்கும் தாய் மாமாவுடன் தங்கியிருப்பதாக கரிஷ்மா யாதவ் கூறினார்.
மேலும், உறவினர்களால் உயிருக்கு ஆபத்து உள்ளதால், துப்பாக்கியை தன்னுடன் வைத்திருப்பதாக கரிஷ்மா தெரிவித்தார். ஆனால், அந்த துப்பாக்கிக்கு உரிமம் இல்லை என்பது தெரிய வரவே போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
+ There are no comments
Add yours