பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கன்டித்து ஜிஎஸ்டி பாதயாத்திரை..! கோவை to சென்னை

Estimated read time 0 min read

கோவை:

தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில், பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கன்டித்து ஜிஎஸ்டி பாதயாத்திரை பேரணி, கோவையில் இருந்து சென்னை வரை நடந்து செல்ல உள்ளனர்.

கோவை ரயில் நிலையம் பகுதியில், உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை தலைவர் மகாத்மா சீனிவாசன் கூறும் போது.

தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பாக பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி கட்டமைப்புக்குள் கொண்டு வரவும், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தியும், நாளை கோவையில் இருந்து சென்னை வரை 550 கிலோ மீட்டர் தூரத்தை ஐம்பத்தி ஆறு நபர்களுடன், 18 நாட்கள் தொடர் ஜிஎஸ்டி பாதயாத்திரையாக நடத்த உள்ளதாக தெரிவித்தார், இந்த நிகழ்ச்சியானது, மகாத்மா சீனிவாசன் தலைமையில் நடைபெற உள்ளது, என்றும், இந்த பாதயாத்திரை, நாளை காலை 11 ம் தேதி, தெற்கு பந்தயசாலை பகுதியில் இருந்து துவங்க உள்ளது என்றும், இந்த பேரணியின் வாயிலாக, பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி கட்டமைப்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றும்,

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தியும், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிக ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது, ஆடம்பர பொருட்கள் சேவைகளுக்கு குறைந்த ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது குறித்து பாதயாத்திரையின் போது, பொதுமக்களை சந்தித்து ஜிஎஸ்டிப் பற்றி துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாகவும், இதற்காக ஒரு லட்சம் துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கபட்டு, மக்களுக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார், 18 நாட்கள் நடைபெறும் இந்த ஜிஎஸ்டி பாதயாத்திரையானது, கோவையில் தொடங்கப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், அரூர், செங்கம், போளூர், ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பூவிருந்தவல்லி, ஆகிய பகுதிகளின் வழியாக ஏப்ரல் 28 ம்தேதி சென்னை சத்யமூர்த்தி பவனில் நிறைவு பெறுவதாக தெரிவித்தார், அங்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இந்த பேரணியை நிறைவு செய்து வைக்க இருப்பதாகவ்ம் தெரிவித்தார் இந்த பேட்டியின் பொழுது காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours