இந்த 4 நாட்கள் மட்டும் துணிவு, வாரிசு சிறப்பு காட்சிகள் ரத்து – வழிகாட்டுதல்கள் வெளியீடு

Estimated read time 1 min read

தமிழ் திரையுலகின் இருபெரும் உச்ச நடிகர்களான அஜித் மற்றும் விஜய் நடித்து வெளியாக உள்ள துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கான சிறப்பு காட்சிகளை 4 நாட்கள் மட்டும் ரத்து செய்து, சில முக்கிய அறிவுறுத்தல்களோடு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழ் திரையுலகத்தின் இருபெரும் ஸ்டார் நடிகர்களான நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’, நடிகர் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையொட்டி 11-ம் தேதி நள்ளிரவு 1 மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு  ஒரே நாளில் வெளியாக உள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படங்களை ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு முதல் நாளிலேயே பார்க்க தயாராகி வருகின்றனர்.

image

இந்த நிலையில் ‘வாரிசு’, ‘துணிவு’ திரைப்படங்களில் இணையதள டிக்கெட் விற்பனை சனிக்கிழமை தொடங்கியது. இணையதள டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை வாங்கினர். மேலும் இந்தப் படங்களின் ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டன. இந்த சிறப்புக் காட்சிகளுக்கான டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக ரூ.1000 முதல் ரூ.2000 வரையிலான விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

image

இதனால் படவெளியீட்டை ஒட்டி சில முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. அதன்படி, “ஜனவரி 13,14,15,16 ஆகிய 4 நாட்களுக்கு துணிவு, வாரிசு படங்களுக்கான அதிகாலை சிறப்பு காட்சிகள் 4 மணி மற்றும் 5 மணிக்கு ரத்து செய்யப்படுகிறது. அதிகாலை காட்சிகளுக்கு ஆட்சியர்கள், காவல் ஆணையர்கள் அனுமதி தரக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக படக்குழு சார்பில் ஜனவரி 11-ம் தேதி மட்டுமே சிறப்பு காட்சிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அந்த காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அரசு தெரிவிக்கவில்லை. மாறாக பொங்கல் பண்டிகையையொட்டி ஏதேனும் காட்சிகள் போடப்படுமா என்ற கேள்விக்கு மட்டுமே தற்போது பதில் கிடைத்துள்ளது.

image

மேலும், “பெரிய கட் அவுட்களை வைத்து பால் அபிஷேகம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கக் கூடாது. டிக்கெட்டுகளின் பின்புறம் திரையரங்குகளில் ஏதேனும் பிரச்சினை தொடர்பான புகாருக்கான உயரதிகாரியின் பெயர், செல் நம்பர், இமெயில் முகவரி அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நிர்ணயிக்கப்பட்டதை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours