வாரிசு Vs துணிவு… | கன்டென்ட் தான் நம்பர் ஒன் – தயாரிப்பாளர் போனி கபூர் | boney kapoor about number one controversy

Estimated read time 1 min read

நம்பர் ஒன் என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் நான் தயாரிக்கும் ‘வாரிசு’ படத்துடன் அஜித் நடிக்கும் படமும் வெளியாகிறது. தமிழகத்தில் விஜய் நம்பர் ஒன் ஸ்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்” என்று வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு சொல்ல, தமிழ் திரையுலகில் சர்ச்சைகள் வெடித்தன. குறிப்பாக அஜித்தின் துணிவு படமும் வாரிசு படமும் நாளை மறுநாள் ஒரேநேரத்தில் வெளியாகவுள்ள நிலையில் நம்பர் ஒன் இரு நாயகர்களின் ரசிகர்களிடம் விவாதமாக மாறியது.

நம்பர் ஒன் தொடர்பாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, துணிவு தயாரிப்பாளர் போனி கபூர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நம்பர் ஒன் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “விஜய் நம்பர் ஒன் என்று தில் ராஜு கூறுவது அவரின் மனநிலை. நம்பர் ஒன் என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. என்னைப் பொறுத்தவரை கன்டென்ட் தான் நம்பர் ஒன். லவ் டுடே எப்படி இவ்வளவு பெரிய ஹிட் ஆனது. கன்டென்ட் இல்லையென்றால் பொன்னியின் செல்வன் லவ் டுடே இவ்வளவு பெரிய ஹிட் ஆகியிருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours