கோவை:
சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை NH-544 நெடுஞ்சாலை காவலர்கள் மாடு ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களிடம் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல், ஓட்டுனர் முதல் உரிமையாளர் வரை வசூல் வேட்டை அதிகரிப்பது தெரியவரிகிறது.
இதில் வாகனம் ஒவ்வொரு சோதனைச்சாவடியை கடக்கும் பொழுது whatsapp குழுக்களில் வாகனம் பதிவு என் அல்லது புகைப்படங்கள் அடுத்தடுத்து வரும் சோதனைச்சாவடியை அலெர்ட் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது என தகவல்.
இது அனைத்துமே மாடுகளை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு மட்டுமே இவ்வகையான சம்பவங்கள் நடக்கின்றன என்பது உண்மை. ஏனென்றால், ஒரு லாரியில் 8 மாடுகள் ஏற்ற வேண்டும் . மேலும் அதற்கு, உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை போதுமான இடைவெளியில் வழங்க வேண்டும் உள்ளிட்ட விதிகள் உள்ளன.
இதில் ஒரு சிலர் இவ்வகையான விதிகளை கடைபிடிக்க மாட்டார்கள் அதனால் இச்சம்பவங்கள் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வேணும் என்றால் மாடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கடுமையான நடவடிக்கையும் மற்றும் இவ்வகையான செயல்களில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கும் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டால் நல்லது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் வாகன ஓட்டுநர்களே அல்லது உரிமையாளர்களிடம், சோதனை மேற்கொள்ளும் காவலர்கள் வழக்கு பதிவு செய்வதே வழக்கம். ஆனால், வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்கள், லஞ்சம் கொடுக்க மறுக்கும் ஓட்டுனர்களை சட்டவிரோதமாக தாக்குவதும் உண்டு எனவும் கூறுகிறார்கள்.
இது குறிப்பாக ஓசூரில் ஆரம்பித்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, பெருந்துறை மற்றும் கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலைகளில் NH 544 இதுபோன்று குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டத்தை காக்கும் காவல்துறையினரே இச்செயலில் ஈடுபட்டு வருவது மிகவும் வேதனை அளிக்கிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வேணும் என்றால் மாடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கடுமையான நடவடிக்கையும் மற்றும் உண்மையாகும் பட்சத்தில் இவ்வகையான செயல்களில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கும் விசாரணை மேற்கொண்டு உண்மையின்படி உரிய நடவடிக்கை மேற்கொண்டால் நல்லது. இது சம்பந்தமாக உயர் அதிகாரிகள் உண்மையை அறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
– வேல்ராஜ்
+ There are no comments
Add yours