Abhishek Bachchan: “ஐஸ்வர்யா ராய்க்கும் எனக்கு விவாகரத்தா?” – அபிஷேக் பச்சன் சொன்ன பதில் | Abhishek Bachchan reacts to divorce rumours with Aishwarya Rai Bachchan

Estimated read time 1 min read

இது தொடர்பான காணொலியும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக, அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் இருவருக்குமிடையே மனஸ்தாபங்கள் என்பதாக பாலிவுட்டில் பேச்சுகள் அடிபட்டன. குறிப்பாக, ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியாருக்குமிடையே சச்சரவுகள் இருப்பதாகப் பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அதுமட்டுமின்றி அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் இருவரும் விவாகரத்துவரை சென்றுவிட்டதாகக் கூறி, பாலிவுட்டில் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானது.

ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன்...

ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன்…

இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சனிடம் கேள்வி எழுப்ப, “நான் இன்னுமே திருமணமானவன்தான்! எங்களுக்கிடையே எந்தப் பிரச்னையுமில்லை. இந்த வதந்திகளுக்கெல்லாம் நான் எந்தப் பதிலும் சொல்லப்போவதில்லை. நீங்கள்தான் இதை ஊதி ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குப் பரபரப்பான செய்திகள், கதைகள் எதாவது வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். பிரபலங்களாக, நடிகர்களாக இதையெல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது” என்று காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours