Star Review: சினிமா கனவைத் துரத்தும் இளைஞனின் நெகிழ்ச்சிப் போராட்டம்; டல்லடிக்கிறதா, ஜொலிக்கிறதா? | Star Movie Review: The coming of age story of a budding actor

Estimated read time 1 min read

போட்டோகிராபராக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் பாண்டியன் (லால்), அவரது மனைவி கமலா (கீதா கைலாசம்), மகன் கலை (கவின்) மற்றும் மகள் செல்வியோடு (நிவேதா) வாழ்ந்து வருகிறார். சிறுவயது முதலே ‘ஹீரோ’ ஆக வேண்டும் என்ற கனவோடு தந்தையால் வளர்க்கப்படும் கலை, தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு திரைத்துறைக்குள் கால்வைக்க முயல்கிறார். திரையுலகத்தின் உண்மை முகமும் அவர் காணும் கனவும் வெவ்வேறாக இருக்க, அவற்றை மீறி தன் கனவிற்காக ஓடும் கலையை, அடுத்தடுத்த நிகழ்வுகள் தோற்கடித்துக் கொண்டே இருக்கின்றன. இறுதியில் கலையின் கனவு என்னவானது என்பதை நெகிழ்ச்சியுடன் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் இளன்.

ஸ்டார் படத்தில்...

ஸ்டார் படத்தில்…

கனவுகளோடு தன் இளமையைக் கொண்டாடும் இளைஞனாக முதல் பாதியிலும், தோல்விகளின் நெருக்கடிகளுக்கு இடையே தன் கனவைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் கணவனாக இரண்டாம் பாதியிலும் தன் தேர்ந்த நடிப்பை வழங்கி, கலை என்ற மனிதனின் வாழ்க்கைப் பயணத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் கவின். முக்கியமாக, இறுதிக்காட்சி கவினின் நடிப்பிற்கு நல்ல தீனி. ஏக்கம், பாசம், கோவம், வைராக்கியம், தோல்வி என அழுத்தமாக நகரும் பாண்டியன் கதாபாத்திரத்தைத் தூக்கிப் பிடிக்கிறது லாலின் முதிர்ச்சியான நடிப்பு.

தன் கதாபாத்திரத்தின் ஏற்ற இறக்கத்தை அறிந்து அதற்கேற்ற கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார் பிரித்தி முகுந்தன். அதீதி போஹன்கரின் மிகை நடிப்பு சில இடங்களில் தொந்தரவாக மாறிப் போகிறது. தேவையான நடிப்பை கீதா கைலாசம் வழங்கியிருந்தாலும், சில இடங்களில் தந்திருக்கும் ஓவர் டோஸான ரியாக்‌ஷன்களைக் குறைத்திருக்கலாம். மாறன், காதல் சுகுமார், ராஜா ராணி பாண்டியன், தீப்ஸ், நிவேதிதா ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours