`கையில் கட்டு!’ – மகளுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்ற நடிகை ஐஸ்வர்யா ராய் |Actress Aishwarya Rai took her daughter to the Cannes Film Festival with an injury

Estimated read time 1 min read

இந்த ஆண்டுக்கான விழா பிரான்ஸில் உள்ள ரிவியரா என்ற இடத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் நேற்று இரவு மும்பை விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். அவர் மும்பை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரது கையில் கட்டுபோடப்பட்டு இருந்தது.

ஐஸ்வர்யா ராய் பத்திரிகையாளர்களை பார்த்து கையை காட்டிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார். அவர் கையில் கட்டுடன் பிரான்ஸ் செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது. நெட்டிசன்கள் அனைவரும் ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆனது என்று கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.

ஒருவர் அடக்கடவுளே என்ன ஆனது என்று கேட்டுள்ளார். ஒருவர் கையை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சிலர் ஐஸ்வர்யா ராயிக்கு அவரது மகள் உதவி செய்ததை பாராட்டியுள்ளனர். கேனஸ் திரைப்படவிழாவில் நடிகை கியாரா அத்வானியும் பங்கேற்பதற்காக பிரான்ஸ் புறப்பட்டு சென்றார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours