திரைக்கதையில் காமெடி, சென்டிமென்ட் எனப் பல்சுவையைச் சேர்த்து ருசிக்க வைக்கிறார்கள் திரைக்கதையாசிரியர்கள் க்யூ டிஸி, லியூ ஜென்ஜி மற்றும் சூ யன். ஆனால், பிளாஷ்பேக் வழக்கமான டெம்ப்ளேட் ரகம்தான். இதையெல்லாம் தாண்டி வசனங்களும் நம்மை மழலை பொழுதிற்குக் கூட்டிச் சென்று மெய்மறந்து சிரிக்க வைக்கின்றன.
கரடி நிகழ்த்தும் சாகங்களையும் ரோபோ நடத்தும் தாக்குதலையும் தரமான வகையில் பிளான் செய்து திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாக ஸ்டன்ட் காட்சிகளைக் கட்டமைத்த விதமும் அற்புதம். அழுத்தமாக எழுதப்பட்ட திரைக்கதை ஒரு பக்கம் படத்தை வேகமாக எடுத்துக் கொண்டு சென்றிருக்கும் நேரத்தில் அதற்கு மேலும் உதவும் வகையில் கூர்மையான கட்களை அமைத்திருக்கிறார்கள் படத்தொகுப்பாளர்கள் டாங்க் ஜின்யாங் மற்றும் ஹுயாங் யான்பிங். எமோஷனல் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் பின்னணி இசையால் கோலோச்சுகிறார்கள் இசையமைப்பாளர்கள் குன் சாவோ மற்றும் லீ சிப்பிங்.
+ There are no comments
Add yours