Crazy Mohan Kamal Haasan Movies Tamil : தமிழ் திரையுலகில் தற்போது வெளியாகும் படங்கள் வந்த இடம் தெரியாமலேயே சில காலங்களுக்குள் மறைந்து விட, ஒரு சில பழைய படங்கள் எத்தனை முறை திரும்ப திரும்ப பார்த்தாலும் நம்மை இன்றளவும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அதற்கு அந்த படத்தில் இடம் பெற்றுள்ள நகைச்சுவை வசனங்களும், அதில் நடிப்பவரும் காரணமாக இருப்பர்.
அப்படி, பல 90ஸ் மற்றும் Early 2K கிட்ஸ்களுக்கும் பசுமையான நினைவாக இருப்பவர், மறைந்த நகைச்சுவை நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேசி மோகன். இவர் எழுதிய வசனத்தில் கமல் ஹாசனின் பல படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளன. அப்படி, கிரேசி மோகன்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான சில படங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
மைக்கில் மதன காமராஜன்:
90களில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்களுள் ஒன்று, மைக்கில் மதன காமராஜன். இந்த படத்தில் ஓரிரண்டு நகைச்சுவை நடிகர்கள் அல்ல, ஒரு பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ளது. மனோரமா, நாகேஷ், கமல் அனைவருக்கும் காமெடி வரும் அவர்கள் நகைச்சுவை செய்வார்கள் சரி, நாயகிகளான ஊர்வசி, குஷ்பூ, ரூபினி கூட காமெடி செய்வார்களா? என்று வியக்க வைத்த படம் இது.
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்:
ஃபாரின் மொழியில் இருந்து, நம்ம ஊரில் தெருக்கோடியில் இருக்கும் மொழி வரை அனைத்தையும் கரைத்து குடித்தவர், கமல்ஹாசன். அவரது அப்படியொரு திறமையை எடுத்தியம்பிய படம்தான், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். “பேதி பேபி, இன்னா சாம்பு மவனே, ஹீ மாமு வாட் இஸ் தட் மாமு, அது நிராயுதபானிங்க இது நிராகரி பாப்பு” என ஒட்டு மொத்த படத்தின் டைலாக்கையும் மனப்பாடம் செய்து வைக்கும் அளவிற்கு சிலர் இப்படத்தை பல முறை பார்த்துள்ளனர். இந்த படம் வெற்றி பெற்றதற்கு பெரிய காரணமாக அமைந்தவர், கிரேசி மோகன். “மார்கபந்து மொத சந்து கவித மாறி இருக்குள்ள”
அவ்வை சண்முகி:
கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான படம், அவ்வை சண்முகி. கமல் நடுத்தர வயது அக்ரஹாரத்து பெண்ணாகவும், நடன கலைஞராகவும் நடித்திருந்த இந்த படத்தை யாரேனும் மறக்க முடியுமா? “உனக்குதான் அவரு மொதலியாரு, எனக்கு அவர் முதலில் யாரோ, அதெப்டி உங்களுக்கு தெரியும்-இப்போதானே சொன்னீங்க..” போன்ற டைலாக்குகள் கிரேசி மோகனின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.
மேலும் படிக்க | திருமணத்திற்கு முன்பே கர்பமான நடிகைகள்! லிஸ்டில் இத்தனை பேரா?
பம்மல் கே.சம்பந்தம்:
“என் பேரு என்னன்னு யாராவது கேட்டா பம்மல் யுவ்வே சம்பந்தம்னுதான் சொல்லுவேன்” என்ற ஒற்றை டைலாக்கே அந்த படத்தின் ஹீரோ கேரக்டர் எப்படிப்பட்டவர் என்று கூறும் வகையில் இருந்தது. ஃபேமிலி டிராமாவா உருவான இந்த படம், கமல்-கிரேசி மோகனின் கூட்டணியில் உருவான ஹிட் படங்களுள் ஒன்றாகும். ஆங்கிலமே தெரியாதது போல கமல் டைலாக் பேசும் இடங்களும், சீரியஸான சீனும் கடைசியில் காமெடி காட்சியாக மாறுவதும், ரசிகர்களை ஈர்த்த அம்சங்களுள் ஒன்று.
பஞ்சதந்திரம்:
இந்த படம்தான், அனைத்து கிரேசி மோகன்-கமல்ஹாசன் கூட்டணிக்கு OG என்று கருதுகின்றனர், சில ரசிகர்கள். “படத்தில் காமெடியா, இல்லை காமெடியில் படமா” என பார்ப்பவர்களை குழம்ப செய்யும் அளவிற்கு நகைச்சுவையை அள்ளி தெளித்திருப்பர். ஆனால் இதில் ஹைலைட் என்னவென்றால் ஒரு இடத்தில் கூட அது மிகையாக இருக்காது. டைலாக்கே இல்லாத இடத்திலும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் மேஜிக், இந்த படத்தில்தான் இருந்தது. “பச்ச-எப்பா பச்சையப்பா, இரண்டு பேர் உண்டு துப்பாக்கியில் குண்டு, சர்தார்ஜி பாடி-பர்தார்ஜி சாடியாம்” என காட்சிக்கு காட்சி இடம் பெற்றிருக்கும் ரசனையான டைலாக்குகளை இன்னும் எத்தனை காலம் ஆனாலும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
உங்கள் நாள் மிகவும் சோகமாக இருந்தால், இந்த படங்களில் ஏதேனும் ஒன்றை பாருங்கள், வந்த துன்பம் தெரியாமல் சிரித்து கொண்டிருப்பீர்கள்.
மேலும் படிக்க | ஷங்கர் மகள் திருமணத்தில் குத்து டான்ஸ் ஆடிய அட்லீ-ரன்வீர் சிங்! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours