நாளை நடிகர் விக்ரமின் பிறந்தநாள் என்பதால் தடபுடலான அப்டேட்கள் ரெடியாகி வருகின்றன.
‘பொன்னியின் செல்வன்’ படத்திற்குப் பின், விக்ரம் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு, அடுத்த படத்திற்கு தயாரானார். சென்ற ஆண்டில் வெற்றி பெற்ற பல படங்களின் அறிமுக இயக்குநர்கள் உட்பட பலரிடம் அவர் கதைகள் கேட்டுவந்தார். அதில் ‘சித்தா’ அருண்குமார் சொன்ன கதை பிடித்துவிட, உடனே முழுக்கதையையும் ரெடி பண்ணச் சொல்லிவிட்டார் விக்ரம். இதில் விக்ரமின் தோற்றம் பேசப்படும் என்கின்றனர்.
இப்போது அருண்குமாரின் படத்தில் விக்ரமின் ஜோடியாக துஷாரா நடிக்கிறார். இந்தப் படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா கமிட் ஆகியிருக்கிறார். இதுபோக மலையாளத்தில் இருந்து சுராஜ் வெஞ்சாரமூடு கமிட் ஆகியிருக்கிறார். டெக்னீஷியன்கள் ஒவ்வொருவராக அறிவிக்கப்பட்டுவருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு என படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர். படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. ‘சித்தா’வைப் போல இதுவும் த்ரில்லர் எனத் தகவல். விக்ரமை வைத்து ‘இருமுகன்’, ‘சாமி ஸ்கொயர்’ ஆகிய படங்களைத் தயாரித்த ஷிபு தமீன்ஸ், இதனைத் தயாரிக்கிறார். ‘சியான் 62’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை காலை வெளியாகிறது.
அதைப் போல, விக்ரம் பெரிதும் எதிர்பார்க்கும் படம் ‘தங்கலான்.’ ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இந்தப் படத்தை பா.இரஞ்சித் இயக்கியிருக்கிறார். கோலார் தங்கவயல் பின்னணியில் நடக்கும் கதை இது. இந்தப் படத்தில் விக்ரமின் உழைப்பு பிரமிக்க வைத்தது. அதன் மிரட்டலான மேக்கிங் வீடியோவும் வரவேற்பை அள்ளியது. ‘தங்கலான்’ படம் கடந்த ஜனவரி 26-ம் தேதி அன்றே உலகமெங்கும் வெளிவருகிறது என அறிவித்தனர். கிராபிக்ஸ் வேலைகள் இருந்ததனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த ஏப்ரல் மாதம் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டனர்.
தேர்தல் தேதி அறிவித்துவிட்டதால் படத்தை மே மாதம் தள்ளி வைத்துள்ளனர். ‘தங்கலான்’ எப்போது வெளியானாலும் விக்ரமின் உழைப்பு வியக்க வைக்கும் என்பதால், படத்தின் அப்டேட்டையும் வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர். அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘தங்கலான்’ அப்டேட்டோடு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே சமயத்தில் விக்ரமின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்களும் வெளியாவதால் மகிழ்ச்சியில் உள்ளனர் விக்ரமின் ரசிகர்கள்.
+ There are no comments
Add yours