இந்திய படங்களில் நடித்திருக்கும் பல கதாநாயகிகள், திருமணத்திற்கு முன்பே கர்பமாகியிருக்கின்றனர். இது, மேலை நாடுகளில் பெரிய விஷயமாக பார்க்கப்படவில்லை என்றாலும், இந்தியாவில் உள்ள சில கலாச்சார பேர்வழிகளிடையே இது பெரிய அபத்தமாக பார்க்கப்படுகிறது. சில நடிகைகள், தங்களது திருமணத்திற்கு முன்பே கர்பமாகி பின்பு திருமணம் செய்து கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த லிஸ்டில் இருக்கும் நடிகைகள் யார் என்று பார்க்கலாமா?
ஸ்ரீதேவி:
தமிழ் நாட்டை சேர்ந்த ஸ்ரீதேவி, இன்று இந்திய அளவில் புகழ்பெற்று விளங்கிய நாயகிகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறார். 2018ஆம் ஆண்டு உயிரிழந்த இவர், பாலிவுட்டில் பெரிய நடிகையாக வலம் வந்தார். இந்தி திரைப்பட இயக்குநர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம், 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைப்பெற்றது. இந்த திருமணத்தின் போது, ஸ்ரீதேவி கர்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.
எமி ஜாக்சன்:
தமிழில், மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமான பிரிட்டீஷ் நாயகி, எமி ஜாக்சன். 2010ஆம் ஆண்டில் கோலிவுட்டில் அறிமுகமான இவர், தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்கமகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். திரைக்கு வந்த குறுகிய காலங்களில் விஜய், ரஜினி, தனுஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலருடன் நடித்து விட்டார். இவருக்கு 2019ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது இவர் ஜார்ஜ் என்பவரை டேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர்களுக்கு தற்போது பிரேக் அப் ஆகிவிட்ட நிலையில், இன்னொரு நடிகரை இவர் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
கல்கி:
‘பாவ கதைகள்’ படத்தில் பெனலபி எனும் கதாப்பாத்திரத்தில் இவரை பார்த்திருப்பீர்கள். பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர், கல்கி கோச்லின். இவர், திருமணம் ஆவதற்கு முன்பே கர்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆலியா பட்:
பாலிவுட்டின் ஹாட் ஜோடிகளாக இருப்பவர்கள், ஆலியா பட்-ரன்பீர் கபூர். ஐந்து ஆண்டுகள் இவர்கள் டேட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது. பிரம்மாஸ்திரா படத்தின் ஷூட்டிங்கின் போது இவர்களுக்குள் காதல் பற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு, கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைப்பெற்றது. அந்த ஆண்டு நவம்பர் மாதமே ராஹா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதனால், இவர் திருமணத்திற்கு முன்பே கர்பமாகி இருப்பார் என்று கூறப்படுகிறது.
இலியானா:
‘இருக்கானா இடுப்பிருக்கானா’ என்ற பாடல் மூலம் தென்னிந்திய அளவில் வைரலானவர், இலியானா. இவர், தமிழில் முதலில் நடித்த படம் கேடி. தமிழ் மற்றும் தெலுங்கில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவர் அனைவர் மத்தியிலும் பயங்கர பிரபலமாகியிருந்தார். பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்திருக்குமிவர், 2023ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இலியானாவிற்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில், அவரது காதலன் யார் என்ற விஷயத்தையும் அவர் மீடியாவின் கண்களில் இருந்து மறைத்து வைத்திருக்கிறார்.
அமலா பால்:
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நாயகிகளுள் ஒருவர், அமலா பால். தமிழில் ‘மைனா’ படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக இருக்கிறார். தலைவா, வேலையில்லா பட்டதாரி1, 2, ராட்சசன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு, ஜகத் தேசாய் என்பவருடன் கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது. கொச்சியில் மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் இவர்களின் திருமணம் நடைப்பெற்றது. திருமணம் முடிந்த கையோடு, அமலா பால் தான் கர்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்தார். இவருக்கு சமீபத்தில் வலைகாப்பு நடத்தி முடிக்கப்பட்டது.
மேலும் படிக்க | நெகடிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் ‘விசில் போடு’ பாடல் செய்த சாதனை! என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours