ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `கனா”. இந்தத் தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தவர் தர்ஷனா அசோகன். இவர் சமீபத்தில் அந்தத் தொடரிலிருந்து விலகினார். திருமணத்திற்காகவே அவர் அந்தத் தொடரிலிருந்து விலகியதாக அப்போதே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தர்ஷனாவிற்கும் அபிஷேக் என்பவருக்கும் இன்று நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
தர்ஷனா பல் மருத்துவர். இவருடைய காதல் கணவர் அபிஷேக்கும் மருத்துவர்தான்! இருவரும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் இன்று இவர்களுடைய திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஜீ தமிழில் `நீதானே எந்தன் பொன்வசந்தம்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரியானார் தர்ஷனா. கேரளாவைச் சேர்ந்த இவருக்கு இந்தத் தொடர் மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து `கண்ட நாள் முதல்’ தொடரிலும் இவர் நடித்தார்.
+ There are no comments
Add yours