Vidya Balan: “எனது முன்னாள் காதலன் என்னை ஏமாற்றினார்! அதனால்…” – மனம் திறந்த வித்யா பாலன் | My first boyfriend broke my heart: Open-minded actress Vidya Balan

Estimated read time 1 min read

அந்த நாளில் அவன் என்னை நொறுக்கிவிட்டான். ஆனால் நான் இப்போது என் வாழ்க்கையில் சிறப்பாக இருக்கிறேன். ஆனால் முதல் காதலன் என்னை ஏமாற்றியது எனக்குள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. எனது வேகத்தை நொறுக்குவதாகவும், வலி மிகுந்ததாகவும் இருந்தது.

ஆனால் அந்தப் பின்னடைவுதான் நான் முன்னேற வழிவகுத்தது. நான் அடிக்கடி டேட்டிங் செல்பவள் கிடையாது. சிலருடன் டேட்டிங் சென்றிருக்கிறேன். ஆனால் நான் சீரியஸாகவும், அதிக நாள்களும் டேட்டிங் செய்தவரையே திருமணமும் செய்து கொண்டேன்” என்றார்.

வித்யா பாலன், தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரைக் காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். வித்யா பாலன் அடுத்ததாக ‘Bhool Bhulaiyaa’ படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிக்கவிருக்கிறார். அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான முதல் பாகத்தில் வித்யா பாலன்தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

பாலக்காட்டைச் சேர்ந்த வித்யா பாலன் தன் கரியரின் ஆரம்ப நாள்களில், பல விளம்பர படங்களில் நடித்தவர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours